Connect with us

Cinemapettai

தம்பியை வைத்து மீண்டும் படம் தயாரிக்கும் சூர்யா.. பின்னணி என்ன?

suriya-karthi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தம்பியை வைத்து மீண்டும் படம் தயாரிக்கும் சூர்யா.. பின்னணி என்ன?

தமிழ் சினிமாவில் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. சூர்யா நடிப்பதையும் தாண்டி நல்ல படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவரது தயாரிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் சிலு கருப்பட்டி.

அதுமட்டுமில்லாது 36 வயதினிலே, பசங்க 2 போன்ற தரமான படங்களையும் தயாரித்துள்ளார். கார்த்தியை வைத்து இவர் தயாரித்த கடைக்குட்டி சிங்கம், தம்பி ஆகிய படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் சூர்யா மீண்டும் கார்த்தியை வைத்து தயாரிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அந்த படத்தை கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கி இருப்பதாகவும், அடுத்த வருடத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

மேலும் கார்த்தி நடிப்பில் சூர்யா தயாரித்த படங்கள் அனைத்தும் வியாபார ரீதியாக சூர்யாவுக்கு நல்ல லாபங்கள் கிடைத்துள்ளன. இந்த பணத்தை கொண்டு அகரம் பவுண்டேஷன் மூலமாக மேலும் பலருக்கு கல்வி சேவை செய்ய இருப்பதாகவும் சூர்யா தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உண்மையான மனுஷன் சார் நீங்க!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top