சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு எந்தவித முன்அறிவிப்பு செய்யாமலும், முறைப்படி அவர்களிடம் அனுமதி பெறாமலும் சிலர் தங்களின் சுயநலன்களுக்காக அவர்களின் பெயர்களையும், படங்களையும் பயன்படுத்துவது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது.

இதுபோன்ற சம்பவங்களினால் பலர் மனம் வேதனைப்படும்படியான சூழ்நிலைகளும் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளில், முன்கூட்டியே ரசிகர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் விளக்கமளித்து சம்பந்தப்பட்ட வதந்திகளுக்கு சில பிரபலங்கள் முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள்.

தன்பெயரை தவறாகப் பயன்படுத்திய அமைப்பு ஒன்றிற்கு தனது கண்டனங்களையும், அது குறித்த விளக்கம் ஒன்றையும் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா. அந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் அப்படியே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது….

suriya-500