மலையாள படத்தில் விஜய் சேதுபதி

‘காயங்குளம் கொச்சுண்ணி’. இது நிவின் பாலி நடித்துக்கொண்டிருக்கும் மலையாளப்படம். சமீபத்தில் மலையாளத்தில் வெளி வந்த படங்களிலேயே மிக பிரம்மாண்ட படமாக இது இருக்கும் என்கிறார்கள்.

kayamkulam kochunni

காயங்குளத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படம். ஹைவெயில் செல்பவர்களிடன் கொள்ளை அடிக்கும் கதாபாத்திரம் நிவின் பாலியினுடையது. ராபின் ஹூட் பட ஸ்டைலில் இருக்குமாம். பணக்காரரிடம் இருந்து திருடி ஏழை மக்களுக்கு தருவாராம்.

vijaysethupathy

ஆனால் விஷயம் அதுவல்ல, இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்பதுதான் சிறப்புச் செய்தி. ஏற்கனவே இப்படத்தில் நடிக்க அமலா பால் , சரத்குமார் ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் தற்ப்பொழுது நம் மக்கள் செல்வனும் இணைந்துள்ளார்.

தானா சேர்ந்த கூட்டம் டீஸர்

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையில் ரெடி ஆகிக் கொண்டிருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இத்திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் மற்றும் சூர்யாவின் 2D என்டர்டைமன்மேன்ட் நிறுவனம் இணைந்து தாயரிக்கின்றது.

இந்தப்படத்தின் முதல் லுக் போஸ்டர், முதல் சிங்கள் சாங் “நானா தானா வீணாபோனா” என்ற பாடலும்; இரண்டாவது சிங்கிள் “சொடக்கு மேல” என்ற பாடலும் இதுவரை ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தின் டைம் லைன் பிளான் முன்னரே விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார். அதன் படி நவம்பர் மாதம் டீஸர் ரிலீஸ் என்று இருந்தது. பலரும் தேதி கேட்டு இணையத்தில் இயக்குனரை நச்சரித்து வந்த நிலையில்.

இன்று தன் காதலி நயன்தாரா பிறந்தநாளில் படத்தின் டீசரை எந்த நாளில் ரிலீஸ் செய்வேன் என்ற தகவலை மாலை சொல்வதாக சொல்லியிருக்கிறார். தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Nayanthara & Vignesh Shivan

மியூசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இன்றைய மாடர்ன் மியூசிக் கலைஞர்கள் மத்தியில் சற்றே வித்தியாசமானவர். இவர் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பல படங்களின் ஹை லைட். சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் தனித்தன்மை பெற்று வருகிறது. இவர் பெரும்பாலான நேரம் ஆஸ்திரேலியாவில் தான் இருப்பார். அங்கு உள்ள ஸ்டுடியோவில் தான் பல பாடல்களின் கம்போசிங் நடைபெறும்.

இந்நிலையில் மனிதர் அங்கு ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த சங்கடத்தை பகிர்ந்துள்ளார்.

சிட்னி ஏர்போர்ட்டில் நடந்த செக் அப்பில், தொடர்ந்து எட்டாவது முறையாக்க அழைக்கப்பட்டேன். ஒரு முரட்டு ஆஃபீஸ்ர் என் அறிவை இன்சல்ட் செய்தார். நிறத்தை வைத்து ஒருவரை சோதனைக்கு அழைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

அப்துல் கலாம் தொடங்கி ஷாருக் கான் வரை இது போல் வெளிநாட்டு விமான நிலையங்களில் தர்மசங்கடமான நிலைக்கு உண்டானதை நாம் கேள்வி பட்டுள்ளோம். இருப்பினும் தொடர்ந்து 8 முறை என்பது கொஞ்சம் டூ மச் தான்.