fbpx
Connect with us

Cinemapettai

சூரரைப்போற்று படத்தில் கோக்குமாக்கு வேலை செய்த சுதா கொங்கரா.. உச்சக்கட்ட கோபத்தில் சூர்யா!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூரரைப்போற்று படத்தில் கோக்குமாக்கு வேலை செய்த சுதா கொங்கரா.. உச்சக்கட்ட கோபத்தில் சூர்யா!

சூர்யா மட்டுமின்றி சூர்யா ரசிகர்களை மொத்தமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் சூரரைப்போற்று. நீண்ட காலமாக வெற்றி இல்லாமல் தவிக்கும் சூர்யாவுக்கு இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என டீசரை வைத்து நம்புகிறார்கள்.

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை சூர்யா தன்னுடைய சொந்த நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் மூலம் தயாரித்துள்ளார்.

யூ சான்றிதழ் பெற்றிருக்கும் சூரரைப்போற்று படம் OTTயில் வெளியாகப் போவதாக பல வதந்திகள் கிளம்பின. ஆனால் OTT தளங்களில் வெளியிடுவதற்கு யூ சான்றிதழ் தேவை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தை தியேட்டரில் வெளியிட தயாராக இருந்த நிலையில் சுதா கொங்கரா செய்த கோக்குமாக்கு வேலை ஒன்றால் சூரரைப்போற்று படம் மாட்டிக்கொண்டு முழிக்கிறது.

இறுதிச்சுற்று படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு சூரரைப்போற்று படத்தின் கதையைத்தான் சொல்லி வைத்திருந்தாராம். அவர்கள் படத்தை தாமதமாக உடனடியாக அதே கதையை சூர்யாவிடம் கூறி படத்தை இயக்கி முடித்து விட்டார்.

படம் முழுக்க முடிந்தவுடன் தான் பிரச்சினையை வெளிவந்துள்ளது. ஏற்கனவே சூரரைப்போற்று படத்தின் கதை அந்த நிறுவனத்தால் ரிஜிஸ்டர் செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் சுதா கொங்கரா மீது அதிருப்தியில் இருக்கிறாராம் சூர்யா.

அதுமட்டுமில்லாமல் படத்தை வெளியிடும் போது எந்த தடையும் இல்லாமல் இருக்க படத்தின் பட்ஜெட் அளவுக்கு ஒரு பெரிய அமௌன்ட்டை அந்த நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சுதா கொங்கரா மீது சூர்யா கடுப்பில் இருந்தாலும் படம் நன்றாக வந்து விட்டதால் வேறு வழியில்லாமல் அடிபணிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இருவரும் இணைய வாய்ப்பு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Continue Reading
To Top