fbpx
Connect with us

Cinemapettai

சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள அதிரடியான ஐந்து படங்கள்.. இனியாவது நல்ல காலம் பிறக்குமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள அதிரடியான ஐந்து படங்கள்.. இனியாவது நல்ல காலம் பிறக்குமா?

ஒரு காலத்தில் அஜித்-விஜய் ஆகியோரையே சினிமாவில் அதிர வைத்தவர் சூர்யா(Suriya). தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி படங்களை கொடுத்து ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஏழாம் அறிவு படம் வரும் போதெல்லாம் ரஜினி படத்துக்கு வரும் கூட்டத்தை போல அப்படி ஒரு மாஸ் காட்டியிருந்தார். ஆனால் சமீபகாலமாக சூர்யாவின் படங்களை சூர்யாவின் ரசிகர்களை தவிர வேறு யாருமே பார்க்க முடியவில்லை.

அந்த அளவுக்கு கதை தேர்வில் சொதப்பி வருகிறார். ஒரு காலத்தில் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்த சூர்யா தற்போது இப்படி செய்கிறாரே என பல ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் உள்ளது.

பசியில் இருப்பவர்களுக்கு பிரியாணி பொட்டலம் கிடைத்ததைப் போல சூர்யாவின் அடுத்தடுத்த படங்களின் வரிசையில் பார்த்து ஆறுதல் அடைந்துள்ளனர் அவரின் ரசிகர்கள்.

சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் திரைப்படம் சூரரைப்போற்று. அதனைத்தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் அருவா. கிராமத்து சப்ஜெக்ட் என்பதால் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

மேலும் வெற்றிமாறன் சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாடிவாசல். இது கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான். அதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு குடும்பப் படம்.

இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரும்புக்கை மாயாவி. கைதி படத்தின்போது சூர்யாவிற்கு லோகேஷ் கனகராஜ் ஒரு கதை சொன்னதாக தகவல்கள் வெளியானது.

ஆக சூர்யாவின் அடுத்தடுத்து ஐந்து படங்கள் தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாகவும் அவரது மார்க்கெட்டுக்கு பெரிய அளவில் உதவி செய்து மீண்டும் பெரிய நடிகர்களுக்கு பலத்த போட்டி கொடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Continue Reading
To Top