Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூரரை போற்றுக்கு பிறகு சூர்யாவின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்.. கொல மாஸ் கூட்டணிகள்!
சினிமாவில் தனக்கென ஒரு இடத்தில் உச்ச நாயகனாக விளங்கும் நடிகர் சூர்யா, தனது நடிப்பினால் பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன்வசம் வைத்துள்ளார்.
இவருடைய படங்கள் எல்லாம் தியேட்டர்களில் தாறுமாறாக ஓடி வருவது வழக்கம். ஆனால் சில வருடங்களாக இவருக்கு மாஸ் ஹிட் கொடுக்கும் படங்கள் அமையவில்லை.
மிகப்பெரிய வெற்றியடையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘சூரரை போற்றி’ படமும் OTT தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறி தனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் சூர்யா.
இப்படி ரசிகர்களை காயப்படுத்திய சூர்யா, மீண்டும் வெற்றிப் படங்களை கொடுத்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்.
இதற்காக சூர்யா தனது அடுத்த படமான 40-வது படத்திற்கு வெற்றி இயக்குனரான வெற்றிமாறன் படத்தில் நடித்து, திரையரங்கமே அதிரும் அளவுக்கு படம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்பின் சூர்யாவின் 41-வது படத்தின் இயக்குனர் ஞானவேல்ராஜா உடன் கூட்டு சேர முடிவெடுத்து, வித்தியாசமான கதையை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.
அதேபோல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜனின் இயக்கத்தில் கிராமத்து பின்னணியுடன் கூடிய கதைக்களத்தில் தனது 42வது படத்தை நடிக்கவிருக்கிறார்.
மேலும் தனது 43வது படத்தில் மாஸ்டர் பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் ‘இரும்புக்கை மாயாவி’ என்ற படத்தில் நடித்து மாஸ் ஹிட் கொடுக்க முடிவெடுத்துவிட்டார்.
இப்படி திடீரென்று முழுவீச்சில் நான்கு படங்களின் நடிக்கப் போகிறேன் என்ற புதிய தகவல்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு நல்ல வேட்டை காத்திருக்கிறது என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் சூர்யா.
