Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உடன்பிறப்பே தலைப்பால் சூர்யாவுக்கு வந்த சோதனை.. அவரே கூறிய தெளிவான விளக்கம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக பல படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இதற்கு முன்னதாக இவரது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் பொன்மகள்வந்தாள் மற்றும் சூரரைப்போற்று ஆகிய படங்கள் வெளியாகின.

மேலும் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம், ஜோதிகா மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள உடன்பிறப்பே, ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ராமேன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மற்றும் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை டாக் ஆகிய நான்கு படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாக உள்ளன.

இந்த நான்கு படங்களையும் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் உடன்பிறப்பே என்ற படத்தின் தலைப்பிற்கு புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.

udanpirappe

udanpirappe

கத்துக்குட்டி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சரவணன் உடன்பிறப்பே எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிகுமார் மற்றும் ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்தது. இதில் ஜோதிகாவின் கணவராக சமுத்திரக்கனி நடிக்கிறார். அண்ணனாக சசிகுமார் நடிக்கிறார்.

கலைஞரின் அடையாள வார்த்தைகளில் ஒன்றாக கருதப்படும் “உடன்பிறப்பே” என்ற வார்த்தையை படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளதால், ஆளுங்கட்சிக்கு ஆதரவான படமாக இருக்குமோ என பலர் பேசி வருகின்றனர்.

ஆனால், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூர்யா பதிலளித்துள்ளார். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் மட்டுமே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்தால் இந்த கேள்வி கேட்கவே தோணாது என சூர்யா கூறியுள்ளார்.

Continue Reading
To Top