சூர்யாவின் புதிய சாதனை.. தெறிக்கவிடும் ரசிகர்கள்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் சூர்யாவுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கடைசியாக இவர் நடித்து ஓடிடி-யில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது.

சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் எப்போதும் ஹேஷ் டேக் மூலம் தங்கள் நட்சத்திரங்களின் படங்களை ட்ரெண்ட் செய்து வருவது வழக்கமான ஒன்றுதான். சமீபகாலமாக தங்களுக்கு பிடித்த நடிகர் என்றால் அவருக்கு ஆதரவாகவும், பிடிக்காத நடிகருக்கு எதிராகவும் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமான கணக்கை தொடங்கி தங்களின் கருத்துகள் மற்றும் திரைப்படங்கள் குறித்த அப்டேட்களையும் பதிவிட்டு வருகின்றனர். பெரும்பாலும் நடிகர்களின் புதிய படங்களின் முதல் பார்வை சமூக வலைத்தளத்தில்தான் வெளியாகிறது.

இதன் காரணமாக அவர்களை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இதனிடையே, ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் அதிகம் ட்ரெண்ட் செய்யப்பட்ட ஹேஷ்டேக் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் வலிமை திரைப்படத்தின் ஹேஷ்டேக் தான் முதலிடம் பிடித்தது.

suriya-cinemapettai
suriya-cinemapettai

இந்நிலையில், தற்போது நடிகர் சூர்யாவின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கை பின்தொடருவோரின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளது. மேலும், தென்னிந்திய நடிகர்களில் 7 மில்லியன் Followers-யை மிக வேகமாக பெற்றுள்ளது சூர்யா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை சூர்யா ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். சூர்யா தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’, ‘ஜெய் பீம்’ ஆகிய படங்களில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்