Connect with us
Cinemapettai

Cinemapettai

சூர்யாவுடன் திடீரென கூட்டணி அமைத்த பிரபல இயக்குனர்.. ஒன்றும் புரியாமல் முழிக்கும் ரசிகர்கள்!

suriya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவுடன் திடீரென கூட்டணி அமைத்த பிரபல இயக்குனர்.. ஒன்றும் புரியாமல் முழிக்கும் ரசிகர்கள்!

சூர்யா என்னதான் தொடர் தோல்விகளில் இருந்தாலும் அடுத்தடுத்த முயற்சிகளில் இருந்து கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் படங்கள் வரிசை கட்டி காத்துக்கொண்டிருக்கின்றன.

கத்துகிட்ட மொத்த வித்தையும் இனிதான் காட்டப் போகிறார் சூர்யா. சூரரைப்போற்று, வாடிவாசல், அருவா, அயன் 2 என போன்ற படங்கள் அடுத்தடுத்து வரிசையாக வெளிவர இருக்கின்றன.

இதுவரை கொடுத்த தோல்வி படங்களுக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்க முடிவு செய்த சூர்யா, திடீரென கோலி சோடா பட இயக்குனர் விஜய் மில்டன் உடன் கூட்டணி அமைக்க உள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய விஜய் மில்டன் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலி சோடா1,2, கடுகு, 10 என்றதுகுள்ள போன்ற படங்களை இயக்கி உள்ளார். இதில் கோலி சோடா படம் மட்டுமே வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் சூர்யா தயாரிப்பில் விஜய் மில்டன் புதிதாக ஒரு படம் இயக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் வெளியிட உள்ளாராம்.

இவ்வளவுதானா அந்த செய்தி என பெருமூச்சு விடுகின்றனர் ரசிகர்கள். ஏற்கனவே புதிய இயக்குனர்களை நம்பி சூர்யா பட்டது போதும் என்கிறார்கள் ரசிகர்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top