Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யா இந்த படங்களில் நடிக்கவில்லை என்றால் காணாமல் போயிருக்கலாம்.. மானத்தை காப்பாற்றிய படங்கள்
சூர்யா வாரிசு நடிகர் என்றாலும் சினிமாவிற்காக தன்னை அர்ப்பணித்த சிறந்த நடிகர். கீழே உள்ள படங்களில் நடிக்கவில்லை என்றால் சினிமாவை விட்டு காணாமல் போயிருக்கலாம்.
1999 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகாவின் நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் சூர்யாவிற்கு தமிழ் சினிமாவில் முதல் அடித்தளமாக அமைந்தது.
2002 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
சூர்யாவிற்கும் மாபெரும் நடிகன் இருக்கிறான் என்பதை வெளிப்படுத்திய இயக்குனர் பாலாவின் பிதாமகன், நந்தா போன்ற இரண்டு படங்களின் மூலம் வெற்றி கண்டார். மாறுபட்ட கதாபாத்திரத்தில் களமிறங்கிய சூர்யா இந்த இரண்டு படங்களும் இன்றளவும் தமிழ் சினிமாவில் திரும்பி பார்க்க வைத்த படங்கள். சூர்யாவை தமிழ் சினிமாவிற்கு அங்கீகாரம் கொடுத்த படங்களில் பிதாமகன் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
2003 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் காதல் மற்றும் அதிரடி கதாபாத்திரத்தில் சூர்யா நடித்த படம் காக்க காக்க. போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்து ரசிகர்களை வெற்றி பெற்ற படம்.
முருகதாஸ் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் கஜினி. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின் நடித்து இருப்பார். ஷார்ட் டைம் மெமரி லாஸ் என்பதை இயக்குனர் முருகதாஸ் மிக அற்புதமாக கையாண்டிருப்பார். இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கௌதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் களமிறங்கினார் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் ரம்யா நடித்திருப்பார்கள். இரட்டை வேடத்தில் சூர்யா மிக தத்ரூபமாக தனது முழு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
2010ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் படம் கிராமத்து மக்கள் வரை சென்றடைந்தது. இந்தப்படத்தில் அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளை எதிர்த்து நின்று போராடும் காவல் அதிகாரியாக நடித்திருப்பார்.
இது போன்ற படங்களை அன்று சூர்யா தவற விட்டிருந்தால் இன்று சினிமாவிலிருந்து காணாமல் போயிருக்கலாம். கடந்த வருடம் வெளிவந்த படங்கள் சூர்யாவிற்கு கை கொடுக்காவிட்டாலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று விரைவில் வெளிவந்து வெற்றி பெற்று இந்த லிஸ்டில் கண்டிப்பாக இருக்கும் என்பதில் எந்த ஒரு தயக்கமும் இல்லை.
