Connect with us
Cinemapettai

Cinemapettai

நீட் தேர்வை எதிர்த்து, சூர்யாவின் அனல் பறக்கும் ட்விட்.. இந்த தைரியம் யாருக்கு வரும்.!

suriya-neet

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீட் தேர்வை எதிர்த்து, சூர்யாவின் அனல் பறக்கும் ட்விட்.. இந்த தைரியம் யாருக்கு வரும்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூர்யா, அகரம் என்ற அறக்கட்டளையின் மூலமாக பல ஏழை எளிய மாணவர்களை படிக்க வைத்து வருகிறார்.

2013ம் ஆண்டிற்கு முன்பு வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் டாக்டர் சீட் கிடைக்கும் என்ற கனவுடன் ஏழை மாணவர்கள் முட்டிமோதி எப்படியாவது படித்து அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

அந்த நிலைமையை மாற்றி, அதன் பின் கொண்டுவரப்பட்ட NEET என்ற மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை அமல்படுத்தி ஏழை மாணவர்களின் மருத்துவ கனவையும் சுக்குநூறாக உடைத்துவிட்டனர்.

தமிழகத்தில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த அனிதா என்ற மாணவி நீட் எக்ஸாமில் மார்க் எடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, நேற்று ஒரே நாளில் மட்டும் மூன்று மாணவர்கள் நீட் எக்ஸாம் பயத்திலேயே தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

எக்ஸாமுக்கு வாழ்த்து சொல்வதை விட்டுவிட்டு இப்ப, ஆறுதல் சொல்ற அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுண்டெழுந்து உள்ளார் சூர்யா.

துரோணாச்சாரியார் எப்படி ஏகலைவனிடம் கட்டை விரலை மட்டும் காணிக்கையாக கேட்டது போல நவீன துரோணாச்சாரியார் ஆறாம் வகுப்பு குழந்தைகளைக் கூட தகுதி தேர்வு எழுத வைக்கும் அவலநிலை அரங்கில் வருகிறது. அதையெல்லாம் தாண்டி முன்னேறி வருபவர்களை பலியிட நீட் தேர்வை ஆயுதமாக கையில் வைத்துள்ளனர்.

இந்த கொரோனா அச்சத்தில் ரொம்ப பாதுகாப்பா வீட்டிலேயே இருந்து காணொலிக் காட்சியின் மூலம் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் தான், வாய்கூசாமல் நீட் தேர்வை மாணவர்கள் அச்சமில்லாமல் போய் தேர்வு வேண்டும் என்று உத்தரவிடுகின்றனர்.

இதையெல்லாம் தாண்டி கொடுமை என்னன்னா, அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை நீட் என்ற அநீதியான தேர்வால் தங்கள் பிள்ளைகளை காவு கொடுத்துவிட்டு பெற்றோர்களுக்கு வாழ்நாள் தண்டனையாக மாறி வருகிறது.

suriya-neet-statement

suriya-neet-statement

இதுக்கு மேலயும் இந்த தேர்வு முறையை நடத்தப்பட்டால், நேற்று நடந்தது தான் இன்று நடக்கிறது, இன்று நடக்கிறது தான் நாளையும் நடக்கும், ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை தீயிட்டு பொசுக்கிய இந்த நீட் தேர்வு முறையால், அப்பாவி மாணவர்களின் உயிரை குடிக்கும் மனிதநேயமற்ற செயலை வேடிக்கை பார்க்காமல் ஒரே சமூகமாக ஒன்றிணைந்து தட்டி கேட்க வேண்டும், என்று தங்கள் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளார் நடிகர் சூர்யா.

சூர்யா வெளியிட்ட வைரல் வீடியோ

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top