வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பட்டி டிங்கரிங் பண்ணப்படும் கங்குவா.. நிலை குலைந்து போயிருக்கும் சூர்யா

Kanguvaa: நடிகர் சூர்யா கங்குவா படத்தினால் தனிப்பட்ட விதத்தில் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறார். அது நேற்று அவருடைய மனைவி ஜோதிகா இன்ஸ்டா பதிவு மூலமே தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது. மூன்று வருட காலங்களாக கடின உழைப்பை போட்டு எடுக்கப்பட்ட படம் தான் இது.

சூர்யா கடின உழைப்பு மட்டும் போட்டால் போதுமா அதற்கேற்ற மாதிரி கதை, மற்ற விஷயங்கள் இருந்தால் தானே ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக தியேட்டர் ரிலீஸ் என்று எதுவுமே சூர்யாவுக்கு இல்லை. மேலும் இந்த படத்திற்கு அவர் போட்ட கடின உழைப்பு, கால நேரம் போன்றவை தான் அவரை இந்த அளவுக்கு பாதித்திருக்கிறது.

பட்டி டிங்கரிங் பண்ணப்படும் கங்குவா

ஏற்கனவே இந்த படம் எக்கச்சக்க கடன் வாங்கி தான் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் ஒருவருக்கு 75 கோடி கொடுத்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற நிலைமையில் இருந்திருக்கிறது.

சூர்யா படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்ற காரணத்தால் 35 கோடி அவருடைய சொந்த பணத்தை கொடுத்து இருக்கிறார். இப்படி பல கஷ்டப்படும் படம் பெரிய அளவில் ரசிகர்கள் மனதை கவராமல் போனது. படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்கள் கழித்து ஒலி அளவு நெகட்டிவ் விமர்சனமாக வந்ததால் அதை குறைக்க சொல்லி இருக்கிறோம் என முதலில் அறிவிப்பு வெளியானது.

இதைத் தொடர்ந்து தற்போது படத்தில் ஒரு பெரிய மாற்றமே கொண்டு வர இருக்கிறார்கள். படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆகப்போக இருக்கும் நிலையில் படத்தை ரீ சென்சார் செய்து 20 நிமிட காட்சிகள் குறைக்க இருக்கிறார்களாம். 1, 2 நாட்களில் இந்த புது வெர்ஷனில் படம் திரையரங்குகளில் வர இருக்கிறது.

எது எப்படியோ சூர்யா போன்ற தரமான சினிமா கலைஞன் சில கதைகளை தேர்ந்தெடுக்கும் பொழுது அதை ரசிகர்களின் பார்வையிலும் யோசித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

நான் கடின உழைப்பை போட்டிருக்கிறேன், படத்தில் தொழில்நுட்பங்கள் அசாத்தியமாக இருக்கிறது, அதனால் நீங்கள் படம் பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதுதான் சினிமா ரசிகர்களின் விமர்சனங்களாக இருக்கிறது.

- Advertisement -

Trending News