Tamil Cinema News | சினிமா செய்திகள்
இது பண்ணினாத்தான் சூரரைப்போற்று 30ம் தேதி ரிலீஸ் ஆகுமாம்.. மண்ட மேல இருக்கிற கொண்டையை மறந்த சூர்யா
இன்னும் சில தினங்களில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாக உள்ளது.
ரிலீஸ் நெருங்கிய நேரத்தில் திடீரென சூரரை போற்று படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது சூர்யாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூர்யாவின் ரசிகர்களுக்கு சூரரை போற்று படம் அமேசான் தளத்தில் வெளியாவது கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது.
இருப்பினும் படம் விரைவில் வெளியாக கண்டுகளிக்க தயாராக இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்து உள்ளனர் படக்குழுவினர்.
சூரரை போற்று படம் விமான துறையைச் சேர்ந்ததால் விமானப்படையில் இருந்து ஒரு குறிப்பிட்ட சான்றிதழ் பெற்று அந்த படத்தை வெளியிட வேண்டுமாம்.
ஆனால் அதை மறந்து சூரரைப்போற்று படக்குழுவினர் தற்போது அவசர அவசரமாக அதற்கு அப்ளை செய்துள்ளார்களாம்.
மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் அந்த சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே சூரரைப்போற்று படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளிவரும்.

suriya-sudha-cinemapettai
