suriya-sivakumar-2
suriya-sivakumar-2

கஜா புயல்.. சிவகுமார், சூர்யா 50 லட்சம் நிதி

சினிமாவில் ஆயிரம் சம்பாதித்தாலும் அல்லது கோடி சம்பாதித்தாலும் அதில் சிலவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதில் சிவகுமார் குடும்பம் முதலில் இருக்கிறது. ஏற்கனவே அகரம் பவுண்டேஷன் என்ற பெயரில் ஒரு ட்ரஸ்ட் வைத்திருக்கிறார் சூர்யா. இப்பொழுது அது மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் சரி தமிழ் நாட்டிலும் சரி எங்கு பாதிக்கப்பட்டுள்ளது அங்குள்ள மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  குழ்ந்தைகளைப்பெற்ற பெற்றோர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்த கார்த்தி, சூர்யா

தற்பொழுது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டில் ngo மூலமாக 50 லட்சம் ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார் சூர்யா ஜோதிகா கார்த்தி என அனைவரும் இணைந்து ஒரு பெரும் தொகையை வழங்குகின்றனர். இது மற்ற நடிகர்களுக்கும் சற்று புரிய வேண்டும். அவர்களும் தங்களால் முடிந்த அளவு நிதி வழங்க வேண்டும் அல்லது நேரில் சென்று சேவை செய்ய வேண்டும்.

இதற்கு முன் ஏற்கனவே பல தொகைகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். இதுபோன்ற செயல்களால் சிவகுமார் சூர்யா கார்த்தி ஜோதிகா போன்றவர்களின் பெயர்களும் நல்ல நிலைப்பாட்டில் மக்களிடம் உள்ளது. இயக்குனர் சிவக்குமார் செல்பி எடுத்த பையனின் மொபைலை தட்டிவிட்டார் இதற்கு வருத்தப்பட்டு ஒரு புது மொபைல் வாங்கி கொடுத்தார். அதெல்லாம் ஒரு புறமிருக்க உண்மையான மக்களுக்கான பிரச்சினை என்று வரும் பொழுது கண்டிப்பாக 50 லட்சம் ரூபாய் வழங்குவது சாதாரண விஷயமல்ல. நன்றி சிவகுமார் குடும்பம்.