fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சூர்யாவின் தோல்விக்காக காத்திருந்த சிவகார்த்திகேயன்.. கடுப்பில் லைகா, கொண்டாட்டத்தில் சன் பிக்சர்ஸ்

sivakarthikeyan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவின் தோல்விக்காக காத்திருந்த சிவகார்த்திகேயன்.. கடுப்பில் லைகா, கொண்டாட்டத்தில் சன் பிக்சர்ஸ்

சூர்யா நடித்த “காப்பான்” திரைப்படம், மீண்டும் சூர்யாவை காப்பாற்றாமல் கைவிட்டது என்றே சொல்லலாம். முதல் காட்சியிலேயே கலவையான விமர்சனத்தை பெற்ற “காப்பான்” திரைப்படம். இரண்டாவது, மூன்றாவது காட்சிகளில் படம் படுதோல்வி அடைந்தது உறுதிசெய்யப்பட்டது. காரணம் சூர்யா ரசிகர்கள் மட்டுமே இப்படத்தை கொண்டாடி வரும் நேரத்தில் பொதுமக்கள், இப்படம் கொண்டாடும் அளவுக்கு இல்லை என்பதை உறுதி செய்தனர்.

சூர்யா பட தோல்வியால் சிவகார்த்திகேயன் தற்போது மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார். செப்டம்பர் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட “நம்ம வீட்டு பிள்ளை” திரைப்படம், செப்டம்பர் இறுதி வாரத்தில் “காப்பான்” பட வெளியிட்டதால் படக்குழுவினர் கலக்கத்தில் இருந்தனர். காரணம் என்னவென்றால், “காப்பான்” படம் பெரிய ஹிட் அடித்து இருந்தால் சிவகார்த்திகேயனின் படம் அக்டோபர் வெளியீட்டிற்கு சென்றிருக்கும்.

அக்டோபரில் ஏற்கனவே பெரிய , பெரிய படங்கள் ரிலீஸுக்கு வரிசைகட்டி நிற்கின்றன. ஆகையால் சூர்யாவின் படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அப்படத்தின் தோல்வி மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.

மேலும் சிவகார்த்திகேயன் ஆசைப்பட்டது போல் “நம்ம வீட்டு பிள்ளை” படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸாகிறது. இன்னொரு விஷயம் என்னவென்றால், சிவகார்த்திகேயன்,  தயாரிப்பு நிறுவனத்திற்கு போன் பண்ணி இந்த வாரம் ரிலீஸ் வைத்துக்கொள்ளலாம் என்று கூறியதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top