சமீபத்தில் வெளியான ’24’ படத்தில் சயிண்டிஸ்ட் வேடத்தில் நடித்த சூர்யா, தற்போது ஹரியின் இயக்கத்தில் போலீஸ் கேரக்டரில் ‘S3’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா அடுத்த படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  எதிரி எல்லாம் நல்லா கதரட்டும் தானா சேர்ந்த கூட்டம் தெரிக்கவிடும் டைட்டில் சாங்.!

ஆம், ‘சிங்கம் 3’ படத்திற்கு பின்னர் ‘கபாலி’ இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ள சூர்யா, அவரிடம் இரண்டு கதைகளை கேட்டுள்ளாராம். அவற்றில் ஒன்று குத்துச்சண்டை வீரர் கதை என்றும் அந்த கதையைத்தான் அவர் தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  சூர்யா அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்.? கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்.!

ஏற்கனவே கோலிவுட்டில் குத்துச்சண்டையை மையமாக வைத்து படமாக்கப்பட்ட ‘இறுதிச்சுற்று’ மற்றும் பூலோகம்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இன்னொரு குத்துச்சண்டை படம் விரைவில் தமிழில் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.