Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கைவிட்ட படத்தை கையில் எடுக்கும் சூர்யா, அதுவும் முரட்டு இயக்குனருடன்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கமர்சியல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை முடித்த பிறகு கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். முதல்முறையாக சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணி இணைவதால் இந்த படம் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது வாடிவாசல் படத்தை விட அனைவரும் எதிர்பார்க்கும் படமாக மாறியுள்ளது சூர்யா ஏற்கனவே கைவிட்ட திரைப்படம். சூர்யா ஆரம்பத்திலிருந்தே சில படங்களை அறிவித்து பின்னர் கைவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி கைவிட்ட திரைப்படம்தான் இரும்புக்கை மாயாவி. கைதி படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் சூர்யாவிடம் இந்த கதையை கூறியதாகவும் அப்போது சூர்யா சில படங்களில் பிசியாக இருந்ததால் இந்த படத்தை கைவிட்டதாகவும் கூறுகின்றனர்.

தற்போது லோகேஷ் கனகராஜ் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. படத்திற்கு படம் அவருடைய மார்க்கெட்டும் சரி படத்தின் தன்மையும் சரி மெருகேறிக் கொண்டே செல்கிறது.

அதேபோல் நீண்ட வருடங்கள் கழித்து இப்போதுதான் வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கும் சூர்யாவுக்கு லோகேஷ் படம் கிடைத்தால் அல்வா சாப்பிடுவது போல தான். இதனால் எப்படியாவது இரும்புக்கை மாயாவி என்ற படத்தை தொடங்கி விடலாம் என்பதில் இருவருமே உறுதியாக இருக்கிறார்களாம்.

irumbukai-mayavi-cinemapettai

irumbukai-mayavi-cinemapettai

Continue Reading
To Top