fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வெற்றிமாறனை வெயிட் பண்ண சொன்ன சூர்யா.. இடையில் புகுந்து ஆட்டையை குழப்பிய இயக்குனர்

suriya-vetrimaran

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெற்றிமாறனை வெயிட் பண்ண சொன்ன சூர்யா.. இடையில் புகுந்து ஆட்டையை குழப்பிய இயக்குனர்

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பிறகு சூர்யா ஹரியுடன் கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதுவும் கிட்டத்தட்ட உறுதியான தகவல் தான். மேலும் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க போவதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஹரி படத்திற்கு பிறகு வெற்றிமாறனுடன் சூர்யா இணைவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போதைய செய்தி பேரிடியாக அமைந்துள்ளது.

சமீபத்தில் சூர்யா-கௌதம் மேனன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதை போல் செய்திகள் வெளியாகின. அதற்கு ஏற்றாற்போல் சூர்யா எப்போது வேண்டுமானாலும் கௌதம் சொன்னால் கிட்டார் தூக்க தயார் என குறிப்பிட்டுள்ளார் சூர்யா.

அதைப்போல் கவுதம் மேனனும் சூர்யாவுடன் பணிபுரிய ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வெற்றிமாறனை ஒதுக்கிவைத்துவிட்டு கௌதம் வாசுதேவ் மேனன் உடன் கைகோர்க்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் சற்று அப்செட்டில் உள்ளனர். சமீபத்தில் வெளிவந்த கௌதம் மேனன் படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top