fbpx
Connect with us

Cinemapettai

ஒரே ஒரு காட்சிக்காக 20 கிலோ எடையை குறைத்த சூர்யா.. மெர்சல் காட்டும் சூரரைப் போற்று

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே ஒரு காட்சிக்காக 20 கிலோ எடையை குறைத்த சூர்யா.. மெர்சல் காட்டும் சூரரைப் போற்று

சூரரைப் போற்று படத்தின் டீசர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுவரை வந்த சூர்யா பட டீசர்களிலே அனைவரையும் வியக்கவைத்த டீசர் என்றே சொல்லலாம். சூரரைப் போற்று திரைப்படம் கோடை கொண்டாட்டமாக வெளிவர உள்ளது.

இந்நிலையில் சூர்யா சூரரைப்போற்று திரைப்படத்தில் ஒரு காட்சிக்காக சுமார் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து பிரமிக்க வைத்துள்ளாராம். அதுவும் ஒரே மாதத்தில் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. நம்பவில்லை என்றாலும் அதுதான் உண்மை.

ஒரு மாதம் முழுக்க வெறும் வெள்ளரிக்காயை மட்டும் சாப்பிட்டு கொண்டு உடல் எடையை குறைத்து அந்த காட்சிக்கு தேவையானதை கொடுத்து படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மேலும் சூரரைப்போற்று படம் எப்படியாவது பெரிய அளவில் வெற்றி பெறவேண்டுமென என பெரிதும் மெனக்கெட்டிருக்கிறாராம்.

20kgs-reduce

20kgs-reduce

நேற்று வெளியான சூரரைப்போற்று டீசரை பார்க்கும்போது கண்டிப்பாக படம் வசூலில் சரித்திரம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கிய இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது.

சூரரைப் போற்று டீசர் வெளியாகிய 12 மணி நேரத்திற்குள் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை யூடியூபில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

நீங்க வேற லெவல் சார்.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top