Tamil Cinema News | சினிமா செய்திகள்
சண்டையை மறந்து புதுசா சேருவோமா? பிரபல இயக்குனருக்கு நூல் விடும் சூர்யா
சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று படம் முடிந்து வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. அடுத்தபடியாக ஹரி கூட்டணியில் நடிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
பிரபல நடிகரும் மற்றும் இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் சினிமாவின் பொக்கிஷம் என்றே கூறலாம். இவர் மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர். சூர்யாவை வைத்து காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
சமீபத்தில் கொடுத்த பேட்டியின்போது சூர்யா இந்த இரு படங்களைப் பற்றி மனம் உருகி பேசினாராம். அதாவது மீண்டும் கௌதம் வாசுதேவ் மேனனுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளாராம். கௌதம் சரி சொன்னால் நான் ரெடியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தற்போது முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்க்கும் சூர்யா கண்டிப்பாக கெளதம் வாசுதேவ் மேனனின் அழைப்பிற்காக காத்திருப்பதாகவும் இந்த கூட்டணி மீண்டும் இணையும் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கெளதம் மேனனின் துருவ நட்சத்திரம் படம் வெளிவர தயாராக உள்ளது. OH MY கடவுளே, வால்டர், நரகாசுரன் ஆகிய படங்களில் நடித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்கத்தில் மட்டும் அல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.
https://twitter.com/SfcKanyakumari/status/1223217780654141440?s=19
இவர்கள் இருவரும் இடையே உள்ள பிரச்சனைகள் தீர்ந்து சமரசமாக கூட்டணி அமைந்தால் பிளாக்பஸ்டர் ஹிட் கண்டிப்பாக கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
