Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யாவுடன் திடீர் கூட்டணி அமைத்த தெலுங்கு நம்பர்-1 இயக்குனர்.. டபுள் மாஸ் படம் ரெடியாகுது போல!
சூர்யாவுக்கு நீண்ட நாட்களாகவே நேரடி தெலுங்கு படமொன்றில் நடிக்க ஆர்வம் இருந்து வந்த நிலையில் அதற்கான சரியான இயக்குனர் கிடைக்காமல் அல்லாடி வந்தார்.
தமிழில் என்னதான் படங்கள் நடித்தாலும் மசாலா இல்லாத படங்களை பெரும்பாலும் தெலுங்கு ரசிகர்கள் வெறுத்து விடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் வந்த சூர்யா படம் எதுவுமே அங்கு வெற்றி பெறவில்லை.
அதுமட்டுமில்லாமல் சூர்யாவின் தெலுங்கு ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சூர்யாவை மறந்து விடுவார்கள் போல. அந்த அளவுக்கு சுமாரான படங்களை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்தடுத்து சூர்யா நடிக்க உள்ள படங்களின் இயக்குனர்கள் பெயரை கேட்டாலே தமிழ் சினிமா வட்டாரம் அதிர்ந்துள்ளது. வெற்றிமாறன், பாண்டிராஜ், ஹரி என வரிசைகட்டி நிற்கின்றன.
இதற்கிடையில் நேரடி தெலுங்கு படமொன்றில் நடிக்க தெலுங்கில் மாஸ் இயக்குனர் என அழைக்கப்படும் திரிவிக்ரம் என்பவருடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளாராம். இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும்.
நீண்ட நாட்களாக இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் தற்போது தான் ஒரு முடிவு எடுத்துள்ளாராம் சூர்யா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் மிரட்ட ரெடியாகி விட்டாராம்.
அப்படியே சூரரைப்போற்று நிலைமை என்னன்னு சொல்லி விட்டு போங்க பாஸ்!
