Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யாவின் நேருக்கு நேர் மோதல்.. விஜய், அஜித் ரசிகர்களை தாங்குவாரா மனுஷன்
தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் மோத முடிவெடுத்த சூர்யாவின் முடிவைக் கண்டு தமிழ் சினிமா உலகமே அதிர்ச்சியில் உள்ளது. ஆனால் அவரது ரசிகர்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறோம் என சூர்யாவை உசுப்பேற்றி வருகின்றனர்.
சூர்யா நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் பெரிய அளவில் வசூல் செய்யாததால் சூரரைப் போற்று படத்திற்கு எதிர்பார்த்த அளவு வியாபாரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் படத்தின் கதையை நம்பி தைரியமாக களமிறங்க உள்ளார் சூர்யா.
ஆனால் அங்குதான் ஒரு சிக்கல். ஏப்ரல் மாதத்தில் ஏற்கனவே தனக்கென ஒரு இடத்தை துண்டு போட்டு வைத்துள்ளார் தளபதி விஜய். ஏப்ரல் 9ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் வெளியாக உள்ளது.
விஜய்யின் மார்க்கெட்டை விட சூர்யாவின் மார்க்கெட் பாதிக்குப் பாதி தான் என்பதால் பெரிய அளவு சூரரைப்போற்று வெற்றி பெற்றாலும் வசூல் கண்டிப்பாக பாதிக்கும். இது சூர்யாவுக்கு நல்லதல்ல. பெரிய படங்கள் எதுவும் இல்லாத நேரத்தில் களம் இறங்குவதே புத்திசாலித்தனம் என்கிறது கோலிவுட்.
சரி ஏப்ரல் மாதத்தில்தான் விஜய் வருகிறார் என பார்த்தால் ஏற்கனவே தீபாவளிக்கு நான் வருகிறேன் என வலிமை படத்தின் மூலம் அறிக்கை விட்டவர் தல. தல அஜித்தின் தமிழ்நாடு மார்க்கெட் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. விஸ்வாசம் படத்தின் மூலம் மொத்த மக்களையும் கவர்ந்து விட்டார். இந்நிலையில் சூர்யா ஹரி கூட்டணியில் உருவாகும் அருவா படத்தை தீபாவளிக்கு வெளியிட உள்ளார் சூர்யா.
அப்படி வெளியிட்டால் மீண்டும் அவருக்குத்தான் பாதிப்பு. வசூலில் பெரிய அடி வாங்க வாய்ப்பு உள்ளது. எனவே சூர்யா இன்னும் புத்திசாலித்தனத்துடன் செயல்படவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார் என கோலிவுட் வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. இருந்தும், நான் மோதி பார்ப்பது என முடிவெடுத்து விட்டேன் என சூர்யா களமிறங்கி விட்டதாக தெரிகிறது.
