அட்டக்கத்தி, மெட்ராஸ் என்ற இரண்டே படங்கள் இயக்கிய ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ படத்தை இயக்கியதன் மூலம் உலக அளவில் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரஞ்சித் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சூர்யா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சூர்யா இந்த படத்தில் பாக்ஸராக நடிக்கின்றார். இந்த படத்திலும் ரஞ்சித் ஒடுக்கப்பட்டோர்கள் குறித்த கதையைத்தான் தேர்வு செய்துள்ளாராம். ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவர் உலக அளவில் பாக்ஸிங்கில் புகழ் பெறுவது எப்படி? என்பதுதான் கதையாம்.

மேலும் ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடல் மூலம் உலக அளவில் புகழ் பெற்ற சந்தோஷ் நாராயணன் தான், ரஞ்சித்-சூர்யா படத்தின் இசையமைப்பாளர் என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், ‘S3’ படத்தை முடித்துவிட்டு சூர்யா வந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.