Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஓடாத படத்துக்கு 100 நாள் போஸ்டர் ஒட்டிய சூர்யா.. சொந்த தயாரிப்பா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவர். ஒரு காலகட்டத்தில் ரஜினிக்கு நிகராக வளர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ஏழாம் அறிவு பட வெளியீடு எல்லாம் மற்ற நடிகர்கள் கனவில் கூட எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பட்டையை கிளப்பியது.
ஆனால் சமீபகாலமாக சூர்யா தேர்ந்தெடுக்கும் கதைகளும் மக்களுக்கு பிடிக்கவில்லை போல. வித்தியாசமாக தேர்வு செய்து நடித்தாலும் சூர்யாவின் அந்த பழைய டச் எந்த படத்திலும் இல்லை.
சூரரைப்போற்று படம் கண்டிப்பாக சூர்யாவை மீட்டெடுக்கும் என நம்பலாம். இது ஒருபுறமிருக்க சூர்யா தனது சொந்த தயாரிப்பில் உருவான ஒரு படத்திற்கு 100 நாள் போஸ்டர் ஒட்டியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சூர்யா சமீப காலமாக தனது மனைவி ஜோதிகா நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறார். ஜோதிகா அல்லாமல் வேறு சில படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமேசான் தளத்தில் சர்ச்சையை கிளப்பி வெளியான திரைப்படம் தான் பொன்மகள் வந்தாள். கோர்ட் டிராமா கதையில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே அந்த அளவு சிறப்பான வரவேற்பை பெறவில்லை.
படம் வெளியான முதல் நாளே அந்த படத்தை தோல்விப்படம் கோலிவுட் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் அந்த படத்திற்கு நூறாவது நாள் போஸ்டர் ரெடி பண்ணி வெளியிட்டுள்ளார் சூர்யா.
என்னதான் சொந்தப் படமாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா எனும் அளவுக்கு சூர்யாவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்.

ponmagal-vandhal-100days-poster
ஒருவேளை முன்னணி நடிகர்களின் படங்களை போல் படம் வெளியாகி நூறு நாள் என போஸ்டர் ஒட்டி இருப்பாரோ?
