சூர்யா 24 வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளார். இந்நிலையில் இவர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்த மீன்குழம்பும் மண்பானையும் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றுள்ளார்.

இப்படத்தில் நடிகர் பிரபுவும் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். சூர்யா பேசுகையில் ‘தற்போதுள்ள நடிகர்கள் எல்லோரும் பிரபு சாரை பார்த்து பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

அவர் பழகும் முறை, மரியாதை கொடுக்கும் விதம் என அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது’ என கூறியுள்ளார்.