fbpx
Connect with us

Cinemapettai

வெற்றிமாறனை ஓரங்கட்டி வைத்த சூர்யா.. வில்லேஜ் இயக்குனரால் நடந்த அதிரடி மாற்றம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெற்றிமாறனை ஓரங்கட்டி வைத்த சூர்யா.. வில்லேஜ் இயக்குனரால் நடந்த அதிரடி மாற்றம்

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா, ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்திற்கு டி இமான் இசை அமைப்பதாகும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. மேலும் அருவா படத்தை 2020 தீபாவளிக்கு வெளியிட இருப்பதாகவும் அறிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வாடிவாசல் எனும் படத்தில் சூர்யா நடிக்கிறார் என சமீபத்திய விருது விழா ஒன்றில் நேரடியாகவே அறிவித்தனர். ஆனால் தற்போது சூர்யா வெற்றிமாறனை விட வேறு ஒரு இயக்குனரை அதிகம் நம்புவதாக தெரிகிறது.

ஏற்கனவே வெற்றி கொடுக்க முடியாமல் போராடிவரும் சூர்யாவுக்கு சூரரைப்போற்று படம் கண்டிப்பாக ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்றுத் தரும் என நம்பிக் கொண்டிருக்கிறார். ஹரி வெற்றிமாறன் என தொடர்ந்து சூர்யாவுடன் களமிறங்கும் இயக்குனர்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர்கள் என்பதால் சூர்யாவுக்கு தொடர் வெற்றிகள் கிடைக்கும் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

ஆனால் தற்போது வெற்றிமாறன் படத்திற்கு முன்னால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பாண்டிராஜ் ஃபேமிலி என்டர்டெய்னர் இயக்குனர் என்றாலும் வெற்றிமாறன் அளவுக்கு திறமையான இயக்குனரா என்றால் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

இருந்தும் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்கள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பின்போது சூர்யாவுக்கு பாண்டிராஜ் கதை கூறியதாகவும் இப்போதுதான் அதை இயக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரியவந்துள்ளது.

முடிந்தவரை வெற்றிமாறனுடன் இணைவதே புத்திசாலித்தனம் என்கிறது கோலிவுட்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top