Connect with us

Cinemapettai

suriya-100-days-movie

Cinema News | சினிமா செய்திகள்

செல்வராகவனை ஓரம்கட்டிய சூர்யா..! அடுத்த படத்தின் ரிலீஸ் உறுதி!

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் காப்பான்.

இப்படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.சூர்யாவிற்கு விஜய் போல கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

suriya 37 kaappaan

அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் மோகன்லால் மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மோகன்லால் இப்படத்தில் உள்ளதால் கேரளாவில் இப்படத்திற்கு அளவுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு மீட்பான், காப்பான் மற்றும் உயிர்கா என மூன்று டைட்டில்களை ரசிகர்களிடம் தேர்ந்தெடுக்க சொன்னர்.

இதில் பெரும்பாலான ரசிகர்கள உயிர்கா என தேர்வு செய்தனர். ஆனால் படக்குழு அதனைத் தேர்வு செய்யாமல் காப்பானை தேர்வு செய்தது. இதனால் ரசிகர்கள் சற்றே ஏமாற்றத்துடன் இருந்தாலும் புத்தாண்டுக்கு சிறந்த விருந்தாக அமைந்தது இந்த படத்தின் அப்டேட். ‘அயன்’ என்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு சூர்யா கே.வி.ஆனந்த் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்த ‘மாற்றான்’ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

மாற்றான் தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத புதிய முயற்சி சூர்யா நம் கண்முன்னே ஒட்டி பிறந்த இரட்டை சகோதரர்களை காட்டியிருப்பார் ஹாரிஸின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்துக்குப் மிகப்பெரிய பலம் சேர்த்தது. முதல் பாதியில் கிடைத்த சுவாரஸ்யம் இரண்டாவது பாதியில் கிடைக்க தவறியதை படம் பெரிதாக வெற்றி அடையாததற்கு முக்கிய காரணம் இதற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கிய அனேகன் படமும் பெரிதாகப் போகவில்லை அடுத்து அவர் இயக்கிய கவண் அவருக்கு ஒரு பெரிய பெயரை வாங்கி கொடுத்தது.

இந்த வெற்றியின் மூலம் அவருக்கு சூர்யாவை இயக்கும் வாய்ப்பு திரும்ப கிடைத்தது இந்த படம் கே.வி.ஆனந்தின் கனவு திரைப்படம் என சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன சூர்யாவுக்கு கடைசியாக படம் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது அவர் செல்வராகவனுடன் இணைந்த என்.ஜி.கே இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் அவர் லைகா தயாரிக்க கே.வி.ஆனந்த் இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க சூர்யா-37 என்றும் புதிய படத்தில் கமிட்டானார் அதுதான் ‘காப்பான்’ இப்போது சினிமா வட்டாரத்தில் இருக்கும் மிகப் பெரிய கேள்வி முதலில் வெளிவருவது என்.ஜி.கே  அல்லது காப்பான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top