Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பரட்டைத் தலை, வக்கீல் கோர்ட், போராட்டம்.. பட்டையை கிளப்பும் சூர்யாவின் புதிய பட கெட்டப் புகைப்படம்

சூர்யா தற்போது பெயரிடப்படாத படத்தில் ஒரு நீளமான கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறாராம். தற்போது வரை இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருவதாகவும், படத்தைப் பற்றிய செய்திகளும் வெளிவந்ததில்லை.

ஆனால் இந்த படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். இதில் சூர்யா ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஒரு சமூக கருத்துக்காக எடுக்கப்படும் இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது.

இதுவரை சீக்ரெட்டாக வைத்திருந்த இந்த படத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என காத்திருந்த சூர்யாவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாம் இந்த கசிந்த புகைப்படங்கள்.

ஒரு காலத்தில் ரஜினிக்கு பிறகு அதிக அளவு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகராகவும் அதிகம் மார்க்கெட் வைத்துள்ள நடிகராகவும் வலம் வந்தவர் சூர்யா. 2000 முதல் 2010 வரை சூர்யாவின் சூப்பர் ஹிட் படங்கள் அதற்கு பறை சாற்றும்.

ஆனால் கடந்த சில வருடங்களில் சூர்யாவுக்கு சிறப்பான படங்கள் எதுவுமே கிடைக்கவில்லை. அஞ்சான் படத்திற்கு பிறகு சூர்யா நடித்த படங்கள் தமிழில் வெற்றி பெறுவதே குதிரைக் கொம்பாக இருந்தது. அதேபோல் தெலுங்கிலும் அவரது மார்க்கெட் சரிய தொடங்கியது.

சூரரைப் போற்று படத்தின் மூலம் மொத்தத்தையும் மீட்டெடுத்த சூர்யா தற்போது மடமடவென பல படங்களில் நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில் அடுத்த இரண்டு வருடத்தில் மட்டும் மொத்தம் மூன்று படங்கள் வெளியாக உள்ளது.

suriya-new-movie

suriya-new-movie

Continue Reading
To Top