தமிழ் சினிமாவில் மீண்டும் செண்டிமெண்ட் கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது. அதிலும் முத்தையா தொடர்ந்து அம்மா, மாமனார், பாட்டி செண்டிமெண்ட் வரை படம் எடுத்துவிட்டார்.

இந்நிலையில் அடுத்து இவர் சூர்யாவுடன் கைக்கோர்த்துள்ளார். இந்த படம் தங்கச்சி செண்டிமெண்ட் படம் என கூறப்படுகின்றது.

இதில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, தங்கச்சியாக நடிக்க ரித்திகா சிங்கிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

முத்தையா கிராமத்து படங்களாக தான் எடுப்பார், இதில் ரித்திகா சிங் எந்த அளவிற்கு செட் ஆவார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.