வாடிவாசல் படத்திற்காக போடப்பட்ட பிரம்மாண்ட செட்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் படங்களை இயக்கி வருகின்றனர்.

சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூர்யாவின் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர். மேலும் இப்படத்திற்காக சூர்யாவிற்கு ஆஸ்திரேலியாவில் சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் சூர்யா வாடிவாசல் எனும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திற்காக பிரம்மாண்டமான செட் ஒன்றை அமைத்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு பிரம்மாண்டமான காட்சிகளை எடுக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தின் தலைப்பு வாடிவாசல் என்பதால் ஜல்லிக்கட்டுக்காக இந்த செட் போடப்பட்டதாக தெரிகிறது. தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vaadivaasal
vaadivaasal

சூர்யா படங்கள் நடிப்பது தாண்டி படங்களை தயாரித்தும் வருகிறார். இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள படங்களை குறைந்த செலவில் தயாரித்து OTT  தளத்திற்கு கொடுத்து வருகிறார். இதனால் ஒரு சில சிக்கல்களை சந்தித்தார் சூர்யா. தியேட்டர் உரிமையாளர்கள் ஆரம்ப காலத்தில் சூர்யா தியேட்டரை நம்பித்தான் படங்கள் செய்தார்.

இப்போது திரையரங்குகள் திறக்காததால் படங்களை OTT நிறுவனத்திற்கு கொடுப்பது தவறு என கூறி வந்தனர். ஆனால் சூர்யா அதைப்பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் தனது தயாரிப்பில் உருவான 4 படங்களையும் OTT தளத்திற்கு கொடுத்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்