Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி விஜய்யை புகழ்ந்து தள்ளிய சூர்யா பட நடிகை.. அப்படி என்ன வசியம் போட்டாரோ?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்றவர்களைப் பற்றி பல பிரபலங்கள் பல பேட்டிகளில் புகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
ஆனால் இதில் பெரும்பாலான மலையாள நடிகர்கள் மற்றும் நடிகைகள் தளபதி விஜய்யின் பெயரை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பது தான் கோலிவுட் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக விஜய்யின் படங்கள் தமிழ்நாட்டில் ரிலீசாகும்போது கொண்டாடப்படும் அளவுக்கு கேரளாவில் படுபயங்கரமாக கொண்டாடப்படுகிறது. இது கேரளா முன்னணி நடிகர்களையே அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
நாளுக்கு நாள் கேரளாவில் விஜய்யின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. அந்த வகையில் சூர்யாவுடன் சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி என்பவர் விஜய்யை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார்.
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த அபர்ணா முரளி, தளபதி விஜய்யின் ஒவ்வொரு படமும் கேரளாவில் திருவிழாவைப் போல் வெளியானதை கண்டு பிரமித்தாராம்.
அதுமட்டுமில்லாமல் எதேர்ச்சியாக ஒருமுறை தளபதி விஜய் ரசிகர் மன்ற விழாவில் கலந்து கொண்ட போது தான் தளபதி மீதான மரியாதை இன்னும் அதிகம் ஆகி விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் அவருடைய ஒவ்வொரு பேச்சிலும் ஒருவரை எப்படி பத்திரமாக பார்த்துக் கொள்வது என்ற அக்கறை இருக்கும். இதனால்தான் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
