fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

உடல் எடையைக் குறைக்க முடியாமல் அவதிப்படும் சூர்யா பட நடிகை.. அவரே கூறிய உருக்கமான தகவல்

navarasa

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உடல் எடையைக் குறைக்க முடியாமல் அவதிப்படும் சூர்யா பட நடிகை.. அவரே கூறிய உருக்கமான தகவல்

தமிழில் பிரபல இயக்குனரான மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிசாசு படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பிரக்யா மார்ட்டின். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற போதிலும் பிரக்யாவிற்கு தொடர்ந்து தமிழில் படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

இந்தியில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மணிரத்னம் தயாரிப்பில் உருவான ஆந்தாலஜி படமான நவரசாவில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து கிட்டார் கம்பி மேலே நின்று என்ற குறும்படத்தில் பிரக்யா நடித்திருந்தார். சமீபத்தில் இப்படம் குறித்தும், நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்தும் பிரக்யா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அவர் கூறியதாவது, இயக்குனர் கெளதம் மேனனிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்று கொள்ள முடியும். சூர்யாவுடன் பணிபுரிந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. தொழில்முறை மிது மிகுந்த கண்ணியத்துடன் செயல்படுவார். அவருடன் பணிபுரிந்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது” என்றார்.

மேலும், “திரைத்துறையில் உடல் அமைப்பு குறித்து நிறைய கேலி, கிண்டல்கள் வரும். என்னிடம் பலரும் உடல் எடையைக் குறைக்குமாறு கூறுவார்கள். மேலும் உடல் எடையை குறைத்தால் நான் அழகாக இருப்பேன் என கூறினார்கள். அவர்கள் சொல்வது ஒரு வகையில் எனக்கு சரியானதும், ஆனால் எனக்கு பிசிஓடி இருப்பதால் உடல் எடையைக் குறைப்பது மிகவும் கடினம்.

guitar-kambi-mela-nindru-navarasa

guitar-kambi-mela-nindru-navarasa

இது பலருக்குத் தெரியாது. எனக்கு இந்த நோய் இருப்பதைச் சொல்வதில் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. உடல் எடையைக் குறைக்க எவ்வளவோ முயற்சி செய்தும், என்னால் குறைக்க முடியவில்லை. மக்கள் ஒரு நடிகர், நடிகையை மனிதனாகப் பார்க்க ஆரம்பித்தால் நிறைய மாற்றங்கள் உண்டாகும்” எனக் கூறினார்.

இளம் வயதில் இப்படி ஒரு பிரச்சனையா என ரசிகர்கள் பலரும் பிரக்யாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இருப்பினும் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தெரியாமல் இது போன்ற கருத்துக்களைக் கூறுவது சரியானது அல்ல.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top