செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

அரியாசனத்துக்கு ஆசைப்பட்டு உள்ளதையும் கோட்டை விட்ட சூர்யா.. சுதா கொங்காராவிடம் சரண்டரான கங்குவா

சூர்யா- ஜோதிகா இருவரும் கோயில் குளம் என சுற்றி வருகிறார்கள். திருப்பதி சென்று தரிசனம் செய்துள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் படத்திற்காக தன்னை ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார் சூர்யா. இதனிடையே அவர் “கருணா” என்ற இந்தி படம் நடிப்பதாக இருந்தது கைவிடப்பட்டது.

சுதா கொங்காரா இயக்கத்தில் ஏற்கனவே இவர் நடிக்க மறுத்த படம் புறநானூறு. இப்பொழுது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க சம்மதித்துள்ளார் அவருக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளார். இந்த மாத இறுதியில் இந்த படத்திற்கான சூட்டிங் நடைபெற உள்ளது.

சூர்யா ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார் ஆனால் இயக்குனர் ஓம் பிரகாஷ் நடிப்பில் இவர் நடிப்பதாக இருந்த கருணா என்ற ஹிந்தி படம் தற்போது ட்ரப்பானது. சுதா கொங்காராவின் புறநானூறு படம் ஹிந்தி எதிர்ப்பு சம்பந்தமான கதை என்பதால் ஹிந்தி மார்க்கெட் போய்விடும் என மறுத்துவிட்டார்.

ஹிந்தி மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்றால் இந்த படத்தை நிராகரிக்கும்படி சூர்யாவின் தம்பி கார்த்தி மற்றும் அவரது மனைவி ஜோதிகா தான் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். இதனால் புறநானூறு படம் வேண்டாம் என மறுத்து விட்டார் சூர்யா. கடந்த ஒரு வருடமாக கங்குவா படத்தில் நடித்து வந்தார்.

இப்பொழுது சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி போன்றவர்கள் புறநானூறு படத்திற்கு கமிட்டாகி சூட்டிங் செல்லும் நேரத்தில் மீண்டும் சூர்யா, சுதா கொங்கராவிடம் புறநானூறு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். பட்ட அடியை மறக்காத சுதா கொங்காரா, சூர்யா கேட்டதை நிராகரித்து விட்டார்.

- Advertisement -

Trending News