புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

யோசிக்காமல் வெற்றி பட இயக்குனரை கை கழுவி விட்ட சூர்யா.. அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையா போச்சு!

Suriya: அரசன நம்பி புருஷனை கைவிட்ட கதை என்று சொல்லுவாங்க. அதைத்தான் நடிகர் சூர்யா அவருடைய சினிமா கேரியரில் செய்திருக்கிறார். சூர்யா கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் பெரிய அளவில் நம்பி இருந்தது கங்கு வா படத்தை தான்.

இந்த படம் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் சூர்யா இனி அவ்வளவுதான், டாப் ஹீரோக்கள் லிஸ்டில் இருந்து பின் தங்கி விட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இது எதற்குமே பதில் சொல்லாமல் கோயில் கோயிலாக சுற்ற ஆரம்பித்திருக்கிறார் சூர்யா. நடிகர் சூர்யாவின் இந்த நிலைமைக்கு பெரிய காரணமே அவருடைய மனைவி ஜோதிகா தான் என்றெல்லாம் பேசப்படுகிறது. ஆரம்பத்தில் ஜோதிகாவுக்கு பாலிவுட் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததால் தான் மும்பைக்கு போனார் என்றும் சொல்லப்பட்டது.

வெற்றி பட இயக்குனரை கை கழுவி விட்ட சூர்யா

மேலும் சூர்யாவையும் பாலிவுட் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஜோதிகா முயற்சி செய்திருக்கிறார். இதனால் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் கர்ணா படம். 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாக்கப்பட இருந்தது.

நடிகர் சூர்யா மகாபாரத கேரக்டர் கர்ணன் கதாபாத்திரத்திலும், நடிகை ஜான்விகபூர் திரௌபதி கதாபாத்திரத்திலும் நடிக்க இருந்தார்கள். இந்த நிலையில் கங்குவாவின் நெகட்டிவ் ரிவ்யூ காரணமாக கர்ணா படத்தின் ப்ராஜெக்ட் டிராப் செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து வலைப்பேச்சு யூடியூப் சேனலில் புதிய தகவல் ஒன்றை சொல்லி இருக்கிறார்கள். அதில் கர்ணா படத்தில் நடிப்பதற்காகத்தான் சூர்யா சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடிக்க இருந்த புறநானூறு படத்தை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

இந்தியில் நேரடி ஹீரோவாக களமிறங்கும் நேரத்தில், இந்தி எதிர்ப்பு குறித்து படத்தில் நடித்த சரியாக இருக்காது என்று தான் சூர்யா இந்த முடிவை எடுத்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது கர்ணா ப்ராஜெக்ட் டிராப் ஆகிவிட்டது. மீண்டும் சுதா கொங்கராவிடம் இந்த கதை பற்றி சூர்யா பேச முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் ஆகிவிட்டதால் சுதா கொங்கரா ரொம்ப உறுதியாக வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். சூரரைப் போற்று போன்ற ஹிட் படத்தை கொடுத்த சுதாவின் படத்தை நிராகரிப்பதற்கு முன் சூர்யா பலமுறை யோசித்து இருக்க வேண்டும்.

- Advertisement -

Trending News