மகேஷ் பாபு தெலுங்கு ஹீரோக்களிலேயே ரொம்ப ஸ்டைலிஷ். இவர் சென்னையிலேயே வளர்ந்தவர். கிட்டத்தட்ட 25 வருஷங்கள் சென்னைவாசி. அதுவும் தி.நகர் வாசி. நம்ம சூர்யா, கார்த்தி மற்றும் யுவன் படிச்ச அதே பள்ளியில் தான் மகேஷ் பாபுவும் படித்துள்ளார்.

இத்தனை வருடம் சென்னையில் இருந்தும் ஒரு நேரடி தமிழ் படத்திலும் மகேஷ் பாபு நடிச்சதில்லை. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ஸ்பைடர் படத்தில் தான் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என்று இரு மொழி படமாக மகேஷ் பாபு நடித்துள்ளார்.

முருகதாஸின் துப்பாக்கி படம் போன்று ஒரு ஸ்டைலிஷ் ஆக்சன் திரில்லர் படம் இது என்று எப்போதோ சொல்லிவிட்டோம். அதே போலத்தான் படமும் இருக்கும் போல் தெரிகிறது.

ஜூன் 23 ம் தேதி வெளியாகும் இந்த படத்தில் மகேஷ் தனக்கே உரிய ஸ்டைலிஷ் பெர்பார்மன்ஸை தந்து இருக்கிறார். விஜய் மகேசு பாபுக்கு நல்ல நண்பராம். எங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு படம் பண்ண வைக்க முடியும் என்றால் அது முருகதாஸால் மட்டும் தான் முடியும் என்று மகேஷ் பாபு சொல்லியுள்ளார்.

அலட்டிக்கொள்ளாத இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிக்கும்ன்னு எப்போ அறிவிப்பு வருதுன்னு பார்ப்போம்.