fbpx
Connect with us

Cinemapettai

பல்டி அடித்த சூர்யா.. பரிதாபத்தில் தவிக்கும் அரசியல்வாதிகள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பல்டி அடித்த சூர்யா.. பரிதாபத்தில் தவிக்கும் அரசியல்வாதிகள்!

சூர்யா தற்போது சூரரைப்போற்று படத்தின் வெளியீட்டுக்கு காத்துக்கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட சஞ்சலங்கள் காரணமாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் நீட் தேர்வை பற்றி மத்திய மற்றும் மாநில அரசுகளை நேரடியாக தாக்கி அறிக்கை வெளியிட்டார்.

இது மத்திய மற்றும் மாநில கட்சியினர் இடையே பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. மேலும் சூர்யா மீது பல கேஸ் கொடுக்க இந்த பிரச்சனை பூதாகரமாக மாறியது.

இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்ததாக சூர்யா மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டது. ஆனால் அது தேவையற்றது என நீதிமன்றம் சூர்யாவுக்கு அறிவுரை வழங்கி அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர்.

அதற்கு சூர்யா தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில், நீதிமன்றங்களுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனால் எப்படியாவது சூர்யாவின் மீது வழக்கு வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அரசியல்வாதிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

suriya-cinemapettai

suriya-cinemapettai

மேலும் சூர்யாவின் இந்த நடவடிக்கைகள் பல அரசியல் வாதிகளுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. ஏற்கனவே விஜய் ஒரு பக்கம் வச்சு செய்த நிலையில் தற்போது சூர்யாவும் தன் பங்குக்கு வச்சு செய்து கொண்டிருக்கிறார்.

Continue Reading
To Top