fbpx
Connect with us

Cinemapettai

சூர்யாவுக்கு இந்த அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும்.. கங்கணம் கட்டி களமிறங்கிய நடிகர்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவுக்கு இந்த அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும்.. கங்கணம் கட்டி களமிறங்கிய நடிகர்கள்!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. வெற்றிப் படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் இன்னமும் அவரது ரசிகர்கள் அவரை விட்டு செல்லவில்லை.

சூர்யா வெற்றிப் படங்கள் கொடுத்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. இருந்தாலும் சூரரைப்போற்று படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்த்த நிலையில் அமேசானில் வெளிவருகிறது.

இது ஒரு சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக நீட் தேர்வை பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டு சும்மா இருந்தவர்களை சொறிந்து விட்டுள்ளார் சூர்யா.

இதற்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் வரவேற்பு கிடைத்த நிலையில் தைரியமாக அடுத்தடுத்து தன்னுடைய கல்விசேவையை தொடங்க முடிவு எடுத்துள்ளார் சூர்யா.

இந்நிலையில் சமீபத்தில் கூட சூர்யா ரசிகர்கள், சூர்யாவை விரைவில் அரசியலுக்கு வருமாறு போஸ்டர் ஒட்டி அழைத்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சினிமாவில் இருக்கும் நடிகர்கள் அவர்களையும் மிஞ்சி விட்டார்கள்.

சூர்யாவுக்கு கல்வி அமைச்சர் பதவியைக் கொடுக்க வேண்டும் என பல நடிகர்கள் தங்களுடைய டுவிட்டர் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் பல ஏழை எளிய குழந்தைகளைப் படிக்க வைத்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சூர்யாவை எப்படியாவது அடக்கி விட வேண்டும் என ஒருபக்கம் அரசியல்வாதிகள் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர்.

பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கிறது என்று!

Continue Reading
To Top