Tamil Cinema News | சினிமா செய்திகள்
சுதா கொங்கரா மகள் திருமணத்தில் பாண்டிராஜ் பட கெட்டப்பில் கலந்துகொண்ட சூர்யா.. மரண மாஸ்!
சுதா கொங்கரா இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் சூரரைப்போற்று.
பயோபிக் படமாக உருவாகியிருக்கும் சூரரைப்போற்று படத்தின் டீசர் டிரைலர் மற்றும் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே ஒரு பெரிய வெற்றி கிடைக்காமல் தடுமாறி வந்த சூர்யாவுக்கு சூரரைப்போற்று படம் நல்ல திருப்புமுனை படமாக அமையும் என்கிறார்கள்.
வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி சூரரை போற்று திரைப்படம் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இந்த படத்தின் கெட்டப் தான் தற்போது இணையதளங்களில் வைரலாக உள்ளது.

suriya-sudha-kongara-2
சுதா கொங்கரா வின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட சூர்யாவின் சமீபத்திய புகைப்படம் தான் அது.

suriya-sudha-kongara-2
