fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கொஞ்சம் விட்டால் சூர்யாவை மறந்து விடுவார்கள் போல.. உயிர் குடுப்பாரா கே.வி.ஆனந்த்

suriya37-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கொஞ்சம் விட்டால் சூர்யாவை மறந்து விடுவார்கள் போல.. உயிர் குடுப்பாரா கே.வி.ஆனந்த்

சூர்யா கே.வி.ஆனந்த் படத்தின் அறிவிப்பு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைக்காவின் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படம் சூர்யா37. என்.ஜி.கே படத்தை பற்றி எந்த ஒரு செய்தியும் இல்லாத காரணத்தினால் சூர்யா37 படத்தின் அப்டேட் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படத்தில் முன்னணி நடிகரான மோகன்லால், சமுத்திரக்கனி மற்றும் சாயிஷா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு மீட்பான்’, ‘காப்பான்’ மற்றும் ‘உயிர்கா போன்ற பெயர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் ரசிகர்களுக்கு ‘உயிர்கா என்ற பெயர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுபற்றி இயக்குனர் கே.வி.ஆனந்த் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். படத்தின் பெயர் வரும் ஜனவரி 1 2019 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

என்.ஜி.கே வருவதற்கு முன்னரே கே.வி.ஆனந்தின் படம் வெளிவரும் என்று சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் என்.ஜி.கே பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம். முக்கியமாக சூர்யா37 படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப்படம் 2019 மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது படத்தின் ஒரு அறிவிப்பும் இல்லாமல் செல்வராகவன் செய்யும் வேலையால் சூர்யாவை மறந்துவிடுவார்கள் போல. சூர்யா கொஞ்சம் உஷாராகி சீக்கிரம் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளிவிட வேண்டும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top