Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த தடவ விடவே கூடாது.. சூர்யா போட்ட சபதம்.. சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்
Suriya : சினிமாவை பொறுத்தவரை ஒரு சில கூட்டணிகளுக்கு எப்போதுமே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் சூர்யா-கே வி ஆனந்த் கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு உற்சாகமாகி விடும்.
இவர்களது கூட்டணியில் வெளிவந்த படங்கள் அனைத்துமே ரசிகர்களை கவர்ந்துள்ளது. அயன், மாற்றான், காப்பான் போன்ற படங்கள் சூரியாவின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் அமைந்தது.
சமீபகாலமாக இருவருமே பெரிய அளவில் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் தங்களுடைய சூப்பர் ஹிட் படம் ஒன்றில் இரண்டாம் பாகத்தின் மூலம் மீண்டும் தங்களது முத்திரையைப் பதிக்க ரெடி ஆகி விட்டார்களாம். ஆம். சூர்யா கேவி ஆனந்த் கூட்டணியில் வெளியான அயன் படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உலகமெங்கும் செம வரவேற்பு பெற்று சூர்யா கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இந்நிலையில் அயன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அவர்களது வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அருவா, வாடிவாசல் போன்ற படங்களுக்குப் பிறகு அயன் 2 உருவாகும் என தெரிகிறது.
இதற்கான அறிவிப்புகள் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்பு வெளிவரும் எனவும் சூர்யாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் காப்பான் படத்தை தயாரித்த லைக்கா நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்க உள்ளது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
