Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யா தவற விட்ட அந்தப் படம்.. கார்த்தி நடித்து மரண ஹிட்
சூர்யா மற்றும் கார்த்திக் தமிழ் சினிமாவின் சிறந்த அடையாளம் என்றே கூறலாம். ஏனென்றால் சினிமாவைத் தாண்டி மக்களுக்கு அகரம் பவுண்டேஷன் மூலம் பல உதவிகள் செய்து வருகின்றன எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் FEFSI ஊழியர்களுக்கு உதவி செய்யும் வகையில் சூர்யா மற்றும் கார்த்திக் குடும்பத்தினர் முதல் ஆளாக முன்வந்து 10 லட்சம் கொடுத்து உதவினர். இவர்களைத் தொடர்ந்து தான் மற்ற பிரபலங்களும் உதவிக்கு முன் வந்தது குறிப்பிடத்தக்கது.
சூர்யா தனக்கு வந்த வாய்ப்புகளில் தன் தம்பிக்கு இது பொருத்தமாக இருக்கும் என்று நடிக்க வைத்து மெகா ஹிட்டான படம் உள்ளதாம்.
போலீஸ் வாழ்க்கையை மையப்படுத்தி உண்மையான கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட படம் தான் தீரன் அதிகாரம் ஒன்று. இந்த படத்தின் கதையை முதலில் சூர்யாவிற்கு கூறியுள்ளனர் ஆனால் சூர்யா இந்த வாய்ப்பை கார்த்திக்கு கொடுத்துள்ளாராம்.
வினோத் இயக்கத்தில் கார்த்திக் உடன் ரகுல் ப்ரீத்தி சிங் இணைந்து மிக பிரமாண்ட வெற்றிப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. வசூல் ரீதியாக பல சாதனைகளை முறியடித்தது என்றே கூறலாம்.
தற்போது போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கும் வலிமை படத்தில் தல அஜித்தை நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
