fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

முரட்டுத்தனமான படத்தில் இணையும் கார்த்தி, சூர்யா.. நம்பர மாதிரியும் இருக்கு, நம்பாத மாதிரியும் இருக்கு

suriya-karthi-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முரட்டுத்தனமான படத்தில் இணையும் கார்த்தி, சூர்யா.. நம்பர மாதிரியும் இருக்கு, நம்பாத மாதிரியும் இருக்கு

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் மற்ற மொழி படங்களை ரீமேக் செய்யும் பழக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. முன்னணி நடிகர்கள் கூட அவ்வப்போது ரீமேக் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த வகையில் மலையாளம் சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் அய்யப்பனும் கோசியும். பெரிய அளவு திரைக்கதை எதுவுமே இல்லை. வெறும் பூனை எலி கதை மாதிரி தான். ஆனால் அந்த படத்தை கையாண்ட விதம்தான் அனைவரையும் கவர்ந்துள்ளது.

படத்தின் மேக்கிங் சூப்பர் என பலரும் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல மொழிகளிலும் இந்த படம் ரீமேக் ஆக உள்ளது. பிரித்விராஜ் சுகுமாரன், பிஜு மேனன் நடிப்பில் வெறும் 5 கோடி செலவில் உருவாகிய 50 கோடி வசூல் செய்த திரைப்படம். இந்த படத்தின் ரீமேக் உரிமையை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கி விட்டதாக பொய்யான தகவல்கள் வெளியாகி உள்ளது.

உண்மையாகவே அந்த படத்தின் ரீமேக் உரிமையை பைவ் ஸ்டார் கதிரேசன் தான் வாங்கியுள்ளார். ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்களை தயாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த படத்தை முதலில் சரத்குமார் மற்றும் சசிகுமார் ஆகியவர்களை வைத்து தான் எடுக்க இருந்தார்களாம். அதன்பிறகு சரத்குமாரை தூங்கி விட்டு ஆர்யா நடிக்கிறார் என்றார்கள்.

தற்போது கடைசியாக சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்திக் இருவரும் இந்த படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் கிளம்பியுள்ளது. உண்மையிலேயே இவர்கள் நடித்தால் மட்டும்தான் அந்த படம் நல்லா இருக்கும் என்பது சமூக வலைதளங்களில் கருத்தாக உள்ளது.

ஏற்கனவே சூர்யா கார்த்தி இணைந்து நடிக்க ஆவலுடன் இருப்பதால் இந்த படத்தை கையில் எடுக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன. சூர்யாவுக்கு கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top