fbpx
Connect with us

மீண்டும் டூயட் பட வரும் சூர்யா-ஜோதிகா ?

News | செய்திகள்

மீண்டும் டூயட் பட வரும் சூர்யா-ஜோதிகா ?

suriya-jyothikaதிரையில் சூர்யா-ஜோதிகா ஜோடியாக நடித்த கடைசி படம் ‘சில்லுன்னு ஒரு காதல்’ என்பது அனைவரும் அறிந்ததே. அதன்பின்னர் இருவரும் சொந்த வாழ்க்கையில் இணைந்தாலும் திரையில் இந்த ஜோடியை காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு ஏற்படவில்லை.

இந்நிலையில் மிகப்பொருத்தமான கெமிஸ்ட்ரியை பெற்ற இந்த மேஜிக் ஜோடி மீண்டும் திரையில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுதான் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாக்.

தற்போது சூர்யா, ஹரி இயக்கத்தில் S3’படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளன. இதுகுறித்த அறிவிப்பை சூர்யா, ஜோதிகா ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top