Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தின் ஆஸ்தான இயக்குனருடன் இணையும் சூர்யா.. பிரம்மாண்டமாக உருவாகும் கூட்டணி
விஸ்வாசம் படத்தை சிவா இயக்கி இருந்தாலும் அவர் இன்னமும் சிறுத்தை சிவா என்று அழைக்கப்படுகிறார்.
Published on

விஸ்வாசம் படத்தை சிவா இயக்கி இருந்தாலும் அவர் இன்னமும் சிறுத்தை சிவா என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால் சிறுத்தை படம் அவருக்கு அந்த அளவுக்கு பெயரை வாங்கிக் கொடுத்தது.
சிறுத்தை படத்தை பார்த்தபின்தான் அஜித் சிவாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகளை கொடுத்தார். சிவாவும் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் நன்றாக பயன்படுத்தினார்.
விஸ்வாசம் படத்திற்கு அப்புறம் சிவா எந்த படத்தை இயக்குவார் என ரசிகர்கள் ஆவலாக இருந்தார்கள். அஜித் படத்தை கூட இயக்குவார் என செய்திகள் பரவியது ஆனால் சிவா தற்போது சூர்யாவை வைத்து படம் எடுக்க பேச்சிவார்த்தை நடக்கிறது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
