Tamil Cinema News | சினிமா செய்திகள்
மதுரை பின்னணியில் உருவாகும் பாலா படம்.. தர லோக்கலாக களம் இறங்கும் சூர்யா
பாலா படம் என்றாலே கோலிவுட்டில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். ஏதாவது ஒன்று புதிதாக பண்ணி இருப்பார் என்ற எண்ணம் அனைவருமே எதிர்பார்ப்பதுதான் அவரின் வெற்றிக்குக் காரணம்.
சமீபகாலமாக தாரதப்பட்டை, நாச்சியார் போன்ற தரமான படங்களை கொடுத்தாலும் அது ரசிகர்களை கவரும் வண்ணம் அமைந்ததால் தோல்வியை தழுவியது. மேலும் தனது ஆஸ்தான ஹீரோவான விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்கு வர்மா என்ற பெயரில் ரீமேக் படம் ஒன்று இயக்கினார். ஆனால் சில பிரச்சினைகளால் அந்த படம் வெளிவரவில்லை.
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் கடுப்பின் உச்சத்திற்கு சென்ற பாலா, அந்தக் கோபத்தை சினிமாவில் காட்ட முடிவு எடுத்தார். பாலா தற்போது ஆர்யா, அதர்வா ஆகிய இருவரையும் வைத்து மதுரை பின்னணியில் தர லோக்கலாக படம் ஒன்றை இயக்க ஆயத்தமாகி வருகிறார்.
இதில் அவன் இவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யா மீண்டும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அதிக அளவு வாய்ப்பு உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெறுமனே வந்து செல்வதைவிட முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என பாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலா என்றால் யாரென நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். நிரூபிப்பார்.
