Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க போகும் சூர்யா.. இளம் இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்!

மூன்றே படம் மனுஷன் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார் லோகேஷ் கனகராஜ். 2017 -ல் வெளிவந்த மாநகரம், 2019-ல் வந்த கைதி தற்போது வெளிவர காத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் என்று தனது இயக்கத்தின் மூலம் மற்ற மொழி சினிமாவை திரும்பி பார்க்க வைத்து விட்டார்.

தற்போது ஒரு படி மேல் சென்று மைத்ரிமூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், தெலுங்கில் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளிவர உள்ளதாம்.

இது ஒருபுறமிருக்க தற்போது சூர்யாவுடன் இணையப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தம்பி கார்த்தியை வைத்து கைதி படத்தின் வெற்றியை முழுமையாக பார்த்த சூர்யா, லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து படம் எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம். இதனால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து கைதி படத்தின் இரண்டாம் பாகம், மீண்டும் தளபதியை வைத்து மற்றுமொரு படம், ரஜினி-கமல் கூட்டணியில் ஒரு படம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்படி லோகேஷ் கனகராஜ்க்கு நான்கு புறமும் அதிர்ஷ்டம் அள்ளி வீசிக் கொண்டுதான் இருக்கிறது. இவர் திறமைக்கு கிடைத்த வெற்றி என்று ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

கடந்த வருடம் எதிர்பார்த்த அளவு சூர்யாவுக்கு படங்கள் ஓடவில்லை என்றாலும் சூரரைப்போற்று படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஊரடங்கு முடிந்தபின் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் முதல் படமாக சூர்யாவின் சூரரைப்போற்று வெளிவரும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சூர்யா ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் OTT-யில் திரையிடப்பட்டு தோல்வியை சந்தித்ததால் சூர்யாவின் சூரரைப்போற்று கண்டிப்பாக தியேட்டருக்கு வரும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.

Continue Reading
To Top