குக்கூ புகழ் ராஜுமுருகன் இயக்கத்தில் சோம சுந்தரம் மற்றும் புதுமுகங்கள் பலர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ஜோக்கர்.

சமூக அவலங்களை ஒளிவுமறைவு இல்லாமல் பதிவு செய்த இப்படத்துக்கு அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அதேசமயம் மக்களின் ஆதரவும் இப்படத்துக்கு கிடைத்ததால் வசூலிலும் இப்படம் கலக்கியது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்த டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு தனது அடுத்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை தற்போது வழங்கியுள்ளார் சூர்யா. இப்படத்தை யார் இயக்குவார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.