Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் ஸ்டலில் சூர்யா! கமல் சார் ஐ ஆம் வெயிட்டிங்!
கமல் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்காக காத்திருப்பதாக நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
இந்திய அளவில் இந்தியில் மிக பிரலமான பிக்பாஸ். நிகழ்ச்சியை தற்போது தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சி வருகிற ஜூன் 18ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
Wow!! So looking forward to the show sir..!! https://t.co/4tLLvU1dPf
— Suriya Sivakumar (@Suriya_offl) May 15, 2017
15 பிரபலங்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்க வேண்டும். மொபைல், கடிகாரம், டிவி, நாளிதழ்கள் என எந்தவொரு பொருளும் அவர்கள் தங்கும் வீட்டில் இருக்காது. முக்கியமாக, கேமரா மூலம் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். அவர்களை கமல் மட்டும் சென்று சந்திப்பார். அவர்களில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதுதான் போட்டி.
Wow eagerly waiting to watch the show sir! ? https://t.co/EBQEDfg8Zt
— Amala Paul ⭐️ (@Amala_ams) May 16, 2017
இப்படியொரு தகவல் வெளியானதில் இருந்து அனைவருமே இந்த நிகழ்ச்சியை காண ஆவலாக உள்ளனர். இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது டுவிட்டரில், ‘‘கமல் சார் நீங்கள் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து மைனா நடிகை அமலா பாலும் ஆவலாக இருப்பதாக அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
