Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷ்,விஜய்யை அடுத்து நீதிமன்றத்தில் வரிவிலக்கு கேட்ட பிரபல நடிகர்.. வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பு மட்டும் என்று பல சமூக நலத் திட்டங்களும் செய்து வருபவர். இயல்பான நடிப்பும் எதார்த்த குணமும் கொண்டவர்.

2010 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் 2007- 2008 மற்றும் 2008- 2009 ஆண்டுக்கான வருமான வரியாக 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று 2011 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

ஏற்கனவே நடிகர் விஜய், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களின் வழக்குகளும் வைரலாகி கொண்டிருந்த நிலையில் தற்போது சூர்யாவின் வருமான வரி விலக்கும் இணையத்தில் பரவி வருகிறது.

suriya-cinemapettai

suriya-cinemapettai

சூர்யா தரப்பில் வருமான வரிக்கு வட்டியை தள்ளுபடி செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் 3 ஆண்டுகள் கழித்து தீர்ப்பாய காலதாமதத்திற்கு தாமதத்திற்கு வருமான வரித்துறை தான் காரணம். வருமான வரி சட்டப்படி வட்டி விலக்கு பெற தனக்கு உரிமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த எஸ்.எம். சுப்பிரமணியம் இருதரப்பினரையும் விசாரித்ததில் சூர்யாதான் வருமான வரியை சரியாக செலுத்துவதாகவும் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். வருமான வரித்துறை சோதனையின்போது சூர்யா முழு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் அவரது வருமான வரி கணக்கை 45 நாட்களுக்கு மேல் தான் தாக்கல் செய்தார் என்றும் கூறப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி சூரியாவின் வழக்கை தள்ளுபடி செய்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு சதவீதம் என்ற அடிப்படையில் வட்டி செலுத்த வேண்டும் என்று சூர்யாவிற்கு உத்தரவு வழங்கப்பட்டது.

Continue Reading
To Top