ரஜினியின் ‘கபாலி’ பட இசை வெளியீட்டின்போது அடுத்து சூர்யா படம் இயக்க உள்ளதாக இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்தார். சிங்கம் 3 படத்தையடுத்து ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இதை முத்தையாவும் உறுதி செய்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக திடீரென்று அறிவிப்பு வெளியானது.

அதிகம் படித்தவை:  நயன்தாராவிற்கு கிடைத்த வரவேற்பு த்ரிஷாவிற்கு கிடைக்குமா?

சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் சூர்யாவை சந்தித்த நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு நேரம் ஒதுக்கி தந்து அவர் கூறும் கதையை கேட்டுப்பாருங்கள், பிடித்திருந்தால் கால்ஷீட் தருமாறு கூறினாராம். அதை ஏற்று சூர்யா, விக்னேஷ் சிவனிடம் கதை கேட்டார். பிடித்திருந்ததால் உடனே ஓ.கே. சொல்லிவிட்டாராம்.